Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் மாற்ற ரயில் நிலையம் வரவேண்டாம்: ரயில்வே போலீஸ்! 

ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மாற்ற ரயில்வே நிலையங்களுக்கு வர வேண்டாம் என்று ரயில்வே காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதனால், மேலே குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், பணம் மாற்ற ரயில் நிலையங்களுக்கு வர வேண்டாம் என்று ரயில்வே காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பயணிகளுக்கு அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை ரயில்வே எடுத்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்