Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணம் பத்தும் சொல்லும்! - இந்திய கரன்ஸி குறித்த 10 விஷயங்கள்...!

ந்தியாவில் இதுவரை அதிக மதிப்புடைய ரூபாய்த்தாளாக இருந்தது 1,000 ரூபாய். தற்போது ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் மதிப்பு ரூபாய்த்தாளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. தாள்கள் அச்சிடும் பணி  முடிவடைந்துள்ளது. விரைவில் இது புழக்கத்திற்கு வர உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு 12 முதல் 500, 1000 ரூபாய்த்தாள்கள் செல்லாது என அறிவித்து அதிர்ச்சி தந்திருக்கிறது மத்திய அரசு.

இந்திய பொருளாதாரத்தின் ஆதார ஸ்ருதியான இந்திய பணத்தைப்பற்றிய 10 விஷயங்கள் இதோ...

1. இந்தியாவில் காகிதத்தினாலான நாணயம் 18ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. பாங்க் ஆ பெங்காள், பாங்க் ஆ பம்பாய், மற்றும் பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய அன்றைய தனியார் வங்கிகள் இதை அச்சிட்டன.

2. 1935-ல் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா நிறுவப்படுவதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது. 1938 -ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அச்சிட்ட முதல் காகிதப் பணம் 5 ரூபாய் நோட்டு. இதில் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

3. இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு என்பது 1,000 ரூபாய் நோட்டுதான். ஆனால் நம்பமாட்டீர்கள்.... சுதந்திரத்திற்கு முன்பே 1938 ல் ரூ.10 ரூ.100 ரூ.1000, வரிசையில் 10,000 ரூபாய் வரை காகித பணத்தினை இந்திய அரசாங்கம் அச்சிட்டு அது புழக்கத்தில் இருந்தது.

4. 1946 -ஆம் ஆண்டு, கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ரூ 1,000 மற்றும் ரூ10,000 ஆகியவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இவை மீண்டும் பொருளாதாரச் சூழல் சீரான 1954-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த முறை ரூ 5,000 ரூபாய் தாள்களும் அச்சிடப்பட்டன. ஆனால் 1000, 5000, 10,000 ரூபாய் தாள்கள் 1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த சமயம் செல்லாது என அறிவிக்க்கபட்டு திரும்பப் பெறப்பட்டது.

5. சில்லறை காசுகளும், ஒரு ருபாய் தாள்களை அச்சிடும் உரிமை பெற்றது மத்திய அரசு மட்டுமே. அந்த பொறுப்பு ஆர்பிஐயை சார்ந்ததல்ல. எனவேதான் முன்பு புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதித் துறை செயலாளரின் கையொப்பமும் கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

6. 1940 இல் போர்க்கால நடவடிக்கையாக ஒரு ரூபாய் நோட்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு இந்திய அரசால் நாணயமாக மாற்றி அச்சிடப்பட்டன.

7. இந்தியாவில் என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று ரூபாய் தாளை வெளியிட்டிருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காக 5th Pillar என்ற என்ஜிஓ அமைப்புதான் பூஜ்ஜியம் ரூபாய் மதிப்பு நோட்டுகளை வெளியிட்டது. ஆனால் புழக்கத்திற்கானதல்ல.

8. ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும் ஒரு 10 ரூபாய் நாணயத்தை உருவாக்க அரசுக்குச் செலவாகும் தொகை 6.10 ரூபாய்.

9. இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த காலத்திலேயே அது நேபாள நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

10. இந்தியாவின் பொருளாதார சமநிலையை சீரழிக்க அதிகமான கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுகிறது பாகிஸ்தான். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றபின்னும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வசதிகள் உருவாகாத குறிப்பிட்ட காலம் வரை பாகிஸ்தானுக்கு இந்திய அரசே ரூபாய்த் தாள்களை அச்சிட்டு கொடுத்துவந்தது. ஒரே வித்தியாசம், இந்திய அரசால் அச்சிடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் வெண்ணிற காலி இடத்தில் Government of Pakistan என்று அச்சிடப்பட்டிருக்கும்.

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ