Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கையில் 500 ரூபாயும், 1000 ரூபாயும் இருந்தால், என்ன செய்யலாம்?

1000

கையில் 500 ரூபாயும், 1000 ரூபாயும் பணம் இருக்கிறது என்ன செய்யலாம்?

உங்களிடம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நிறைய இருக்கின்றன. இனி இதனை எப்படி மாற்றுவது என்ற யோசிக்கிறீர்களா?   உங்களுடைய பணத்திற்கு சரியான கணக்கு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் வங்கிக்கு சென்று உங்களிடம் உள்ள அனைத்து பணத்தையும் உங்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.  இவ்வாறு பணத்தை டெபாசிட் செய்ய செல்லும் போது உங்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றையும் வங்கிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், உங்களை பற்றிய தகவலை (KYC) ஏற்கனவே பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் உங்களது வங்கி கணக்கில் 50,000 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

உங்களது வங்கி கணக்கை தவிர, இதர வங்கி கணக்கிலும் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம்.நீங்கள் ஒர்ுருக்குங்கியில் பணம் செலுத்த வேண்டும் என்றால், உங்களுக்கும் அதே வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். இதைத்தவிர, உங்களது வங்கி கணக்கில் இருந்து இன்னொருவரின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் வழியாகவும், காசோலை வழியாகவும், டிமாண்ட் டிராப்ட் வழியாகவும் எவ்வளவு பணத்தை வேண்டுமானலும் பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம். 

இதற்காக இனி வரும் காலங்களீல் ஆன்லைன் வழியாக பரிமாற்றம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். இதற்காக நெட் பேங்கிங் வசதியினை பெற்றுக்கொள்வது நல்லது. காசோலை புத்தகத்தை கண்காணாத இடத்தில் வைத்திருந்தால் அதனை தூசி தட்டி இனி வரும் காலங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். 

கடைகளில் பொருட்களை வாங்கும் போது டெபிட் கார்ட்டை பயன்படுத்தி பொருளை வாங்க பழகிக்கொள்ள வேண்டி இருக்கும். இதன் மூலம் கையில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட் இல்லையே என்ற கவலை கொள்ள தேவையில்லை. 

உங்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு இல்லை என்றால் தினமும் 4000 ரூபாய் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். வங்கி வசதியும் உங்களது பகுதியில் இல்லை என்றால் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம். 

நவம்பர் 24-ம் தேதி வரை வங்கியில் ஒரு வாரத்திற்கு இருபதாயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்கலாம்,  அதுவும் ஏடிஎம் மூலம் நவம்பர் 11 தேதி முதல் 18 தேதி வரை 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். நவம்பர் 19 -ம் தேதி முதல் 4000 ரூபாய் ஏடிஎம்-யில் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி இருக்கிறது. ஆகையால் ஏடிஎம்-யில் முன்னெச்சரிக்கையுடன் கையாளவும்.

- ஞா. சக்திவேல் முருகன்

எடிட்டர் சாய்ஸ்