Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வந்தது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள்!

ரிசர்வ் வங்கி அனுப்பிய புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தடைந்தது.  நாளை முதல் புதிய நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று சென்னை மண்டல ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், அரசு மருத்துவமனைகள், அஞ்சலகங்கள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அனுப்பிய புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தது. இது குறித்து சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், நாளை முதல் புதிய நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close