Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நேரத்தில்.. ஒரே வங்கியில் 2 ஆயிரம் பேர் குவிந்தால்..?

இனி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு வங்கிக் கிளைக்கு 2,000 பேருக்கு மேல் வந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களைக் கையாள்வது மிகவும் சிரமமாக காரியம். ஆகையால் நிதானமாக வாருங்கள் என வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி: 

"இது ஒரு முக்கியமான மைல் கல். இதற்கு முன் மொராஜி தேசாய் காலத்தில் இதே மாதிரி அப்பொழுது பெரிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கும் ஒரு முயற்சியாக இருக்கும். இது நிச்சயம் வெற்றி பெறும். 

30 ஆண்டுகளுக்கு முன் இன்டர்நெட் பேங்கிக், மொபைல் டிரான்சாக்ஸன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என எதுவும் இல்லை. இப்போது அனைத்து வசதிகளும் உள்ளன. ஆன்லைனில் பரிவர்த்தனை மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆகையால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்; அவசரப்படத் தேவையில்லை. கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளுங்கள். 

வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கொஞ்சம் சிக்கல் இருக்கும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.4,000 வரை மட்டுமே வங்கியில் வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கார்டு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்து இந்த பணம் போதும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு வங்கிக் கிளைக்கு 2,000 பேருக்கு மேல் வந்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களைக் கையாள்வது மிகவும் சிரமமான காரியம். ஆகையால் நிதானமாக வாருங்கள். 

புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்திலும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். ஆகையால் கையில் வைத்திருக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு ஆன்லைன் மூலமாகவும், கார்டு மூலமாகவும் செலவு செய்வது சிறந்தது. பொதுமக்களைப் பொறுத்தவரை அவசரப்படாதீர்கள், பதற்றப்படாதீர்கள், பொறுமையாக இருங்கள்" என்றார். 

லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.வெங்கடேஷ்: 

"இந்தியாவில் கறுப்புப் பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மோடி எடுத்த இந்த நடவடிக்கை மிகச் சரியானது. இது பாமர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இது வங்கித் துறைக்கு நிச்சயம் பாசிட்டிவ் ஆக இருக்கும். ஏனெனில் இதன் மூலம் இனி பொதுமக்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிக் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 

மோடியின் இந்த அறிவிப்பு பண பொருளாதாரத்திலிருந்து, பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய நடவடிக்கை இது. ஒரு நாளைக்கு ரூ.4,000 வீதம் ஒரு வாரத்துக் ரூ.20,000 மட்டுமே பெற முடியும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளைக்கு ஒரு நாள் மட்டும் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் என்னவோ, ஏதோ என்று வங்கி கிளையை முற்றுகையிட வாய்ப்புள்ளது. எனினும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை பதற்றமடையத் தேவையில்லை. நிதானமாகச் செயல்படுங்கள்" என்றார். 

சோ.கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close