Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

8 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்!

திருவண்ணாமலை அருகே அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தண்டரை கிராமத்தில் அக்டோபர் மாதம் மட்டும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். முதலில், அக்டோபர் 7-ம் தேதி சிறுமி ஒருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மொத்தம் 8 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். கடைசியாக அக்டோபர் 31-ம் தேதி கிறிஸ்தா என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இறந்த அனைவருக்குமே வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து உயிரிழப்பால் கிராமமே அதிர்ச்சியில் உரைந்துபோய் இருந்த நிலையில், கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், கிராமத்து குடிநீர், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த போதும், எல்லாம் சரியாகவே இருப்பதாக அறிக்கை வந்தது. இதனிடையே முன் பகை, சொத்து மற்றும் குடும்பப் பிரச்னை போன்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அக்டோபர் 31-ம் தேதி இறந்த கிறிஸ்தா என்பவரின் உடலில் 'மஞ்சள் பாஸ்பரஸ்' என்னும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக தற்போது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இந்த 'மஞ்சள் பாஸ்பரஸ்' எலிகளைக் கொள்வதற்காக கிராமப்புறங்களில் பயன்படுத்தக்கூடிய விஷ பொருளாகும்.

ஒரே கிராமத்தில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், இப்போது 'மஞ்சள் பாஸ்பரஸ்' என்னும் க்ளூ கிடைத்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வாட்நரே, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இறந்தவரின் உடலில் 'மஞ்சள் பாஸ்பரஸ்' எப்படி வந்தது என்ற கோணத்தில், விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

- ரா.அருள் வளன் அரசு, அ.அச்சணந்தி   படம்: கே.முரளி

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close