Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் என்ஜினீயரின் ‘எட்டாம் வகுப்பு’ பிரேமம்... துப்பாக்கி தூக்கிய உறவினர்கள்!

நெல்லை மாவட்டத்தில் அக்காளை காதலித்ததற்காக அத்தை, மாமாவை சட்டக்கல்லூரி மாணவர்  துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜ். பைனான்சியர். இவரது மனைவி பால்கனி. இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சிம்சன் என்ற மகனும் உள்ளனர். கவிதா, இன்ஜினீயர். சிம்சன், 3-ம் வருட சட்டக்கல்லூரி மாணவர். பால்கனியின் தம்பி சிவகுமார். விவசாயி. இவரது மனைவி சுசிலா. இவர்களது மகன் இசக்கிமுத்து. எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், பெங்களுரூவில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் இசக்கிமுத்து, தன்னுடைய அத்தை மகளான கவிதாவை காதலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இவர்களது காதலுக்கு வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிவகுமாரும், சுசிலாவும் குமாரபுதுகுடியிருப்பில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது சிம்சனுக்கும், சிவகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிம்சன், துப்பாக்கியால் சிவகுமாரையும், சுசிலாவையும் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் சிவகுமாருக்கு தலையிலும், இடுப்பிலும், சுசிலாவுக்கு தோளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வந்துள்ளார். அவர், இருதரப்பினரையும் சமரசப்படுத்தியுள்ளார். இதில் அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவ்வாறு ஒருவரை, ஒருவர் ஆவேசமாக தாக்கியதால் இந்தப் பகுதி போர்களமாக மாறியது. இதுகுறித்து வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார், அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் தகராறில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிவகுமார், சுசிலா, சுரேஷ் ஆகியோர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ராஜ் மற்றும் அவரது உறவினர் சிவகுமார் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் ராஜின் மகன் சிம்சன், துப்பாக்கியால், அவரது மாமா சிவகுமாரையும், சுசிலாவையும் சுட்டதாக எங்களுக்கு முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காதல் விவகாரத்தில் இந்த தகராறு நடந்ததாகத் தெரியவந்துள்ளது. கவிதாவும், இசக்கிமுத்துவும் காதலித்துள்ளனர். இசக்கிமுத்து படிக்கவில்லை என்பதால் கவிதாவுக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க ராஜ் குடும்பத்தினர் விரும்பவில்லை. மேலும் இசக்கிமுத்துவின் குடும்பம், கவிதா குடும்பத்தை விட வசதி குறைவு. இந்த இரண்டு காரணங்களுக்காக இசக்கிமுத்து, கவிதா திருமணத்துக்கு தடைக்கல் போட்டுள்ளனர் ராஜ் குடும்பத்தினர். ஆனால், பணம், படிப்பு எல்லாம் மறந்து இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். அதை முதலில் இரண்டு குடும்பங்களும் தடுத்துள்ளனர். இசக்கிமுத்து பெங்களூரில் இருந்தாலும் இருவரும் தங்களது காதலை போன் மூலம் வளர்த்துள்ளனர். இந்த ஆத்திரத்தில்தான் கவிதாவின் சகோதரன் சிம்சன், இசக்கிமுத்துவின் அப்பா சிவகுமார், சுசிலாவிடம் நேற்றிரவு தகராறு செய்துள்ளார். இந்த வழக்கில் தேப்படும் சிம்சன், தலைமறைவாகி விட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

 நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ