Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாண்டில்யனின் பிறந்த தினம் இன்று!

மிழ் இலக்கியத்தில் , புதினத்தின் சகாப்தம் என்பது பிரதாப முதலியார் சரித்திரத்தில் இருந்து தொடங்குகிறது. 1857இல் இந்நாவல் எழுதபட்டு, அதன் பிறகு அடுத்த நூறு ஆண்டுகளில் வெகுவாக எழுதி குவிக்கபட்ட புதினங்கள், குடும்பம், அறம், தேசியம், சுதந்திர போராட்டம், லட்சியவாதம், முதலியவற்றை மையமாக கொண்டு புனையப்பட்டன. இத்தகைய வகைமைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு உலகை வாசகர்களிடம் எழுத்தினூடாக அறிமுகம் செய்து வைத்தவர்களில் முதன்மையானவர்களில் இருவர்  கல்கியும் சாண்டிலியனும். எதார்த்த வாழ்கையில் இருந்து வாசகர்களை கால எந்திரம் ஏதுமின்றி, சேர சோழ பாண்டியர் காலகட்டத்திற்கு தங்களின் புதினங்களால் கடத்தி சென்ற இவ்விரு சரித்திர நாவல்களின் முன்னோடிகளில், அமரர் சாண்டிலியனின் பிறந்த தினம் இன்று.

நம் எல்லோருக்குமே , ராஜ்ஜிய வாழ்க்கையின் மீதும் அக்காலகட்டத்தின் மீதும் ஒரு கவர்ச்சி இருக்கும். இதற்கு முக்கிய காரணம், ‘ ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்’ என தொடங்கும் எல்லா கதைகளிலும் தவறாமல் இடம்பெரும் அம்சமான- சாகசம்தான். அச்சாகசம் நமக்கு ஒரு அக கிளர்ச்சியை தருவதாய் இருக்கிறது. கடற்புறா, யவன ராணி, மூங்கில் கோட்டை, மன்னர் மகள், மாதவின் மனம், என அவர் எழுதிய 48 புதினங்களிலும், சாகசத்திற்கு பஞ்சமே இல்லை. கடல் கடந்து வேறொறு ராஜ்ஜியத்திற்கு பயணித்தல், போர் வியூகங்கள் – ரகசிய திட்டங்கள் வகுத்தல், சீனனோடு மல்லியுத்தம் செய்தல், சூழ்ச்சியை கடத்தல், என புறம் சார்ந்த சாகசங்களோடு இளங்கன்னியரோடு காதல் செய்தல், அங்கங்களை ரசித்தல் என அகம் சார்ந்த சாகசமும் அடங்கும்.

இன்றும் புத்தக கண்காட்சிகள்தோரும் வாசகர்களால் தேடி வாங்கபட்டு, வாசிக்கபடும் எழுத்தாளரான சாண்டிலியனின் இயற்பெயர்- எஸ். பாஷ்யம். தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அடுத்துள்ள திருகோவிலூரில், 1910ஆம் ஆண்டு, ராமானுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோதைவல்லி ஆகியோருக்கு பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் நாட்களில் தேசிய இயக்கங்களால் ஈர்க்கபட்டு காங்கிரஸில் சேர்ந்தார். எனவேதான் , சாண்டில்யன் எழுதிய ‘பலாத்காரம்’ என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருந்தார். பின்னர் 1930இல் சென்னையில் குடியேறிய பிறகு, ஆனந்த விகடன், நவசக்தி, திராவிடன் ஆகிய இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுத தொடங்கினார்.

வரலாற்று சம்பவங்களை பின்ணணியாக கொண்டு இவர் எழுதிய புதினங்களெல்லாம் இவரின் பிற்கால வாழ்கையில் தான் எழுதபட்டு, வெளிவந்தன. முதன்மையாக இவரொரு பத்திரிக்கையாளர். 1935இல் இருந்து அடுத்த பத்தாண்டுகாலம் ,சுதேசமித்திரனில் இவர் நிருபராக பணியாற்ற , 1937இல் காந்தியடிகளை பேட்டி கண்டிருக்கிறார் சாண்டிலியன். பின்னர் ஆங்கில ஏடாண ஹிந்துஸ்தான் டைம்ஸில் உதவி ஆசிரியராக இருந்தார்.

சினிமாதுறையிலும் பணியாற்றி , ’சுவர்க்க சீமா’ , ’என் வீடு’ ஆகிய திரைபடங்களுக்கு திரைகதைகள் எழுத, அவரின் சினிமா அனுபவம் குறித்து - சினிமா வளர்ந்த கதை என்கிற புத்தகம் எழுதி, வெளியிட்டார்.

இன்றும், சாண்டிலியன் இலக்கிய உலகில் நிலைபெற்றிருப்பதற்கு காரணமான இவருடைய சரித்திர புதினங்களின் தொடக்கம், அமுதசுரபில் சரித்திர நிகழ்வுகளை களமாக கொண்டு வெளிவந்த இவரின் சிறுகதைகள்தாம். அதை தொடர்ந்து, குமுதம் இதழில் இவரின் புதினங்கள் தொடர்கதையாக வெளிவரதொடங்கின.

சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் காலமானார்.

- ந.அருண் பிரகாஷ் ராஜ்
(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close