Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து! நிஜமா? நாடகமா?

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், கெயில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசின் ஆதரவை மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்க, தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2013-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் பூமியில் பயன்படுத்தப்படும். இதனால் நிலத்தடிநீர் அதிகளவில் வெளியேற்றப்படும்... இதுபோல் இன்னும் பல்வேறு காரணங்களால் காவிரி டெல்டா மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதற்கிடையே தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் அதற்கான பணிகளை தொடங்காததால், அதற்கு அளிக்கபட்ட அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், அடுத்த பூதமாக ஷேல் கேஸ் திட்டம் காவிரி டெல்டா மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான் தற்போது இத்திட்டங்கள் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி. வெங்கட்ராமன் ’இது முழுமையான அறிவிப்பாக இல்லை. தி கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் மாநில அரசை நிர்ப்பந்திக்க மாட்டோம் எனவும் மக்களின் அனுமதி கிடைத்தால் தான் செயல்படுத்துவோம் என்ற ரீதியில் அமைச்சர் அறிவிப்பு உள்ளது. ஷேல் திட்டம் குறித்து தகவல் இல்லை. மீத்தேன், ஷேல் திட்டங்களுக்கு அரசு மற்றும் எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கமாட்டொம் என மத்திய உறுதி கொடுக்க வேண்டும். ஒ.என்.ஜி.சி காவிரி படுகையில் பெட்ரோல்-எரிவாயு எடுப்பதாலும் இப்பகுதி மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனையும் மத்திய அரசு ரத்து செய்தால் தான் விவசாயிகளின் நிம்மதி  நிலைக்கும்” என்றார். 

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசகர் டாக்டர் பாரதிச்செல்வன் ‘’தர்மேந்திரா பிரதானின் அறிவிப்பு திட்டவட்டமாக, அதிகாரப்பூர்வமாக தெளிவாக வெளிவர வேண்டும். ஷேல் கேஸ் ஆய்வுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் திசை திருப்புவதற்கான முயற்சியாக இந்த அறிவிப்பு இருந்துவிடக்கூடாது. மீத்தேன் ஆய்வுக்கு தனியார் மற்றும் ஒ.என்.ஜி.சி ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தற்போது பிரதானின் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்க ஒ.என்.ஜி.சி-க்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தர்மேந்திரா பிரதான் தெரிவித்திருந்தார். ஏன் இந்த குழப்பம். ஷேல் கேஸ், மீத்தேன் இரண்டு திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் தான் நாம் மகிழ்ச்சி அடைய முடியும்" என்றார். 

    "மத்திய அரசு ஷேல், மீத்தேன் மற்றும் பெட்ரோலிய எரிவாயு திட்டங்களை நிறுத்த வேண்டிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட முன் வரவேண்டும்" என்பதே டெல்டா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. எனவே இந்த அறிவிப்பு நிஜமா? நாடகமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

-கு.ராமகிருஷ்ணன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close