Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் செலவுகளுக்கு அரசு போக்குவரத்து கழக பணம்!

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட போக்குவரத்து கிளைகளில் கடந்த இரண்டு நாட்களாக கலெக்‌ஷன் ஆன பணம் அனைத்தையும் அரவகுறிச்சியில் போட்டியிடும் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் வாங்கிக்கொண்டு, அதற்கு மாற்றாக செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒவ்வொரு டெப்போவிலும் கொடுத்து அதை பேங்கில் கட்ட சொல்லி சென்றுள்ளார்கள்.

இது கும்பகோணம் கோட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்கவுள்ள அனைத்து போக்குவரத்து கோட்டத்திலும் நடந்துள்ளது, இதற்கு அதிகாரிகளும் ஒத்துழைக்கிறார்கள் என்கிறார்கள் ஊழியர்கள்.

போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைவரும் இன்னும் செந்தில் பாலாஜியைத்தான் அமைச்சராக நினைத்து மதித்து அவர் சொல்படி கேட்டு நடந்து வருகிறார்கள். அதனால்தான் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்கு இந்தளவுக்கு உதவி செய்கிறார்கள் என்கின்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.

-செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ