Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திறக்கப்படாத ஏ.டி.எம்-கள் காத்திருக்கும் பொதுமக்கள்

 

கடந்த செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு மத்திய அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில்  புழகத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள ஏ.டி.எம்-கள் இன்று முதல் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை முதல் பொதுமக்கள் ஏ.டி.எம் கள் முன்பு காத்திருக்கின்றனர். 

ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான ஏ.டி.எம்-கள் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும், பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் முடப்பட்டுள்ளன. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 2 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு வருகிறது

 புதுசேரியில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்-களும் இன்னும் திறக்கவில்லை. ரூபாய் நோட்டுக்களை எடுக்க பொதுமக்கள் ஏ.டி.எம் முன்பு குவிந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ