Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திவாலாகி விட்டதா தமிழ்நாடு அரசு? அன்புமணி கேள்வி 

தமிழக அரசு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறதா என்றும், தமிழகம் திவாலான மாநிலம் என அறிவிக்கப்படப்போகிறதா  என்பதை அறிய விரும்புகிறோம் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் நிதிச்செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை; தமிழகத்தின் நிதிநிலைமை உயிரோட்டத்துடன் இருக்கிறதா என்பதை அறிவதற்காக நாடித்துடிப்பை சோதித்து பார்க்கும் நோக்கம் கொண்டவை. ஆனால், இந்த வினாக்களுக்கு தமிழக அரசிடம் பதில் இல்லை என்பதுதான் சோகம்.

தமிழக அரசு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறதா? தமிழகம் திவாலான மாநிலம் என்று அறிவிக்கப்படப்போகிறதா என்பதை அறிய விரும்புகிறோம். அத்தகைய நிலை ஏற்பட்டால்  தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 360வது பிரிவை குடியரசுத் தலைவர் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். நீதிபதிகளின் கருத்தில், நீதித்துறைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க மறுப்பதால் ஏற்பட்ட கவலையும், வேதனையும், கோபமும் வெளிப்படையாக  தெரிகிறது. ஆனால், நீதிபதிகளின் கருத்துக்கள் எந்த வகையிலும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் நேரடியாக ஒரே ஒரு அனல் மின்திட்டத்தைக்கூட திட்டமிட்டு, செயல்படுத்த முடியவில்லை; ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட அறிவித்து அமைக்க முடியவில்லை. அவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட  ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 600க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு  மிக மோசமான நிதி நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணங்கள் எதையும் காட்ட முடியாது. தமிழகம் திவாலான மாநிலம் என்று அரசு அறிவிக்கப்போகிறதா என சென்னை உயர்நீதிமன்றம்  வினா எழுப்பியுள்ள நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்; நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close