Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரி அணைகளில் நீர்மட்டம் உயர்வு!

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. தற்போதைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 13.85 அடியாக உள்ளது. அணைக்கு 96 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 28.10 அடியாக இருந்தது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 6.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 7.08 அடியும், பொய்கையில் 9.70 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 41.75 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 - ராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ