Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவாரூரில் காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு! 




திருவாரூரில் நவம்பர் 29-ம் தேதி காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி டெல்டாவில் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 29-ம் தேதி காவிரி உரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- க.சதீஷ்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close