Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழை விவசாயின் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்! 


கரூர் அருகே ஏழை விவசாயி ஒருவரின் திடீர் அழைப்பை ஏற்று, மு.க.ஸ்டாலின் அவரது இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். 

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், கரூரை அடுத்த தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி ராமசாமி, " எங்கள் இல்லத் திருமண விழாவிற்கு நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும்" என்று ஆசையுடன் கூறியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக விவசாயி ராமசாமியின் இல்லத்திருமண நிகழ்ச்சிக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி, விவசாயி ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். 

திருமண நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ராமசாமி, "எங்கள் இல்லத் திருமண விழாவிற்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்று நாங்கள் கனவிலும் நினைத்துக்கூட பார்க்கவில்லை, அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையில் கூப்பிட்டேன். கூப்பிட்டதுமே அவர் உடனே வந்துவிட்டார். இது கனவுபோல் இருக்கிறது" என்று நெகிழ்ந்து பேசினார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close