Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகுபலி பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி சோதனை!

 


புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ள நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் சென்னையில் 8 முக்கிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக ஏற்பட்ட புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி, ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதேபோன்று நேற்று டெல்லி மற்றும் மும்பையிலும் ரூபாய் நோட்டு மாற்றப்படுவது தொடர்பாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ