Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சனி,ஞாயிற்றுக்கிழமையில் அஞ்சலகங்கள் திறப்பு

சனி, ஞாயிற்றுக்கிழமை தலைமை, துணை அஞ்சல் நிலையங்களில் பழைய ரூ.500,1,000 நோட்டுகளை மாற்றலாம் என தமிழக அஞ்சல் துறை கூறியுள்ளது. 
புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில் பழைய 500,1000 நோட்டுகளை அஞ்சலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமிழகத்தின் தலைமை மற்றும் துணை அஞ்சல் நிலையங்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என  தமிழ்நாடு தலைமை அஞ்சல் அதிகாரி சார்லஸ் லோபோ தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட மற்ற சேவைகளும் சனி, ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ