Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுராந்தகம் குப்பைத் தொட்டியில் ரூ.50 ஆயிரம் பழைய நோட்டுக்கள்! 

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலைய குப்பைத் தொட்டியில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த பணம் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் என்று தெரிகிறது. 

குப்பைத் தொட்டியில் பணம் கிடப்பதாக அருகில் இருந்த பொதுமக்களுக்கு தகவல் பரவியதும், அடுத்த சில நிமிடங்களில் போட்டி போட்டுக்கொண்டு ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், குப்பைத் தொட்டியை பார்வையிட்டனர். எனினும், இது குறித்து புகார் எதுவும் கொடுக்காததால், போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ