Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுருக்குப்பை பணத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு: திருநாவுக்கரசர் கிண்டல்

சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வராமல் சுருக்குப் பையில் இருந்து கொண்டு வருகிறது மத்திய அரசு என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம் என்றார்.

மேலும், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்படுகின்றன என்றும், நிர்ப்பந்தம் காரணமாக தமிழக அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்றும் கூறினார் திருநாவுக்கரசர்.

எடிட்டர் சாய்ஸ்