Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதே நாளில் சென்ற ஆண்டு என்ன நடந்தது தெரியுமா? #ChennaiRain

மேலும் படங்களுக்கு....

ன்று நவம்பர் 12-ம் தேதி... கடந்த 3 நாட்களாக புதிய ரூபாய் நோட்டுக்காகவும் சில்லரைக்காகவுமான காத்துக்கிடக்கின்றனர் இந்தியர்கள். கைகளில் கட்டுக்கட்டக பணம் வைத்திருந்தும் செலவு செய்ய முடியாமல் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் அதிகாலை முதலே கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைமை. மோடி அறிவித்த இந்தப் பணப்புயலில், மக்கள் மறந்துபோன விஷயங்களில் முக்கியமான ஒன்று வடகிழக்கு பருவமழை! 2015-ம் ஆண்டு இதே நவம்பர் 12-ம் தேதி, மழை - வெள்ளம் தமிழக மக்களைத் தவியாய் தவிக்க விட்டிருந்தது. அன்று என்ன நடந்தது, மக்கள் சந்தித்த சிரமங்கள் என்ன? சின்ன ஃப்ளாஷ் பேக்.

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. அடுத்தடுத்த நாட்களில் சினம்கொண்ட மேகங்கள், உடைத்துவிட்டாற்போன்று மழையைக் கொட்டித் தீர்த்தது. நவம்பர் 7-ம் தேதி முதல் தொடந்து நான்கு நாள்களுக்கு கடலூரில் பெய்த கனமழையால்,  மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பாலங்கள் உடைந்து சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று வங்கிகளில் முடங்கியிருக்கும் மக்கள், அன்று வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்தனர். 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகளின் வாழ்வாதாரமே பாழானது.

மேலும் படங்களுக்கு...

பெரியகாட்டுப்பாளையம், குறிஞ்சிப்பாடி, விசூர் என கடலூர் மாவட்டம் முழுவதும் நவம்பர் 12-ம் தேதி வரை  22 பேர் உயிரிழந்தனர்.
இதே போல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கிண்டி, சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இங்குமட்டுமல்ல பரவலாக சென்னை முழுவதையும் மழை நீர் மூழ்கடித்தது. ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மேலும் படங்களுக்கு....

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பல இடங்களில் மக்கள் தங்கள் குடியிருப்பின் மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு  ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டன. இவையனைத்தும் நவம்பர் 12-ம் தேதி வரையிலான நிலைமை மட்டுமே. நவம்பர் 15-க்குப் பிறகு மழை சில நாட்களுக்கு ஓய்ந்து, மீண்டும் சுழற்றியடிக்க ஆரம்பித்தது. இன்று மக்களிடம்  கைநிறையப் பணம் இருந்தும் மதிப்பில்லாமல் இருக்கிறதே, அதேபோல கடந்த மழையின் போது பணம் வெறும் தாளாகவே பார்க்கப்பட்டது. கையில் பணம் இருந்தாலும், பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்தனர்.

நூற்றாண்டு காணாத மழையில் இருந்து மக்கள் மீண்டுவர நெடுங்காலம் பிடித்தது. தற்போது அடிக்கும் பணப்புயலில் இருந்து மக்கள் எப்போது மீள்வார்களோ?

-ஆ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close