Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி புறநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல்

கொள்ளிடம் ஆற்றில் நெ.1 டோல்கேட்டில் செயல்பட்டு வரும் மணல் ரீச்சை கடந்த 15 வருடமாக நடத்தி வருபவர் நெடுமாறன் மகன் சக்திவேல். அதிமுகவை சேர்ந்த இவர் முன்னாள் ஒன்றியக் குழு துணை தலைவர் வெற்றி செல்வியின் சகோதரர். இவருக்கும் அதிமுக  ஒன்றிய செயலாளர் ஜெயக்குமாருக்கும் மணல் ரீச் தொடர்பாக  பிரச்னை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றியம் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் சக்திவேல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது,

அடுத்து இந்த பிரச்னையில் தலையிட்ட எம்எல்ஏ பரமேஸ்வரி மூலம்  மணல் ரீச்சில் மணல் அள்ள முடியாமலும், இது தொடர்பாக சக்திவேலிடம் எம்எல்ஏ பேச்சுவார்த்தையும் நடத்தினாராம். இது குறித்து அதிமுகவினர், " வெற்றி செல்வி  தஞ்சை பிரச்சாரத்தில் உள்ளார்.  அவர் மாவட்ட செயலாலர் எம்.பி ரத்தினவேலு தலைமையில் பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் எம்.எல்.ஏ பரன்னுடன் வராமல் மாவட்ட செயலாளருடன் பிரச்சாரத்திற்கு போனது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இதனை அடுத்துதான் மணல் ரீச் தடை விதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இப்படி திருச்சி  புறநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சம் அடைந்துள்ளது என வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

 - சி.ய.ஆனந்தகுமார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close