Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்': வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், 'வங்கக் கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்'. என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ