Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈரோடு அருகே விவசாயி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம். இவர் மூன்றரை ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டிருந்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் காலிங்கராயன் கால்வாயில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் 22 நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து நீர் திறக்கப்படாததால் இவரது மஞ்சள் பயிர்கள் கருகியது.

குறிப்பாக மஞ்சள் சாகுபடிக்காக ராமலிங்கம் ஏக்கருக்கு இரண்டரை லட்சம் வீதம் என மொத்தம் ரூ.8 லட்சம் செலவு செய்தார் என்றும், மேலும் மஞ்சள் பயிரிட்ட ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் ராமலிங்கம் மனமுடைந்து பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close