Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலூர் கோயில் உண்டியலில் 44 லட்சம் ரூபாய் கறுப்பு பணம்!

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தப் பிறகு அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து 20, 50, 100, 2000 நோட்டுகளாக மக்கள் மாற்றி வருகின்றனர்.

சில இடங்களில் கறுப்புப் பணத்தை வருமான வரித்துறையினர் வசூல் செய்து வரும் நிலையில், சில இடங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கிழித்தும், எரித்தும் வருகின்றனர். இந்த வரிசையில் வேலூர், ஜலகண்டீஸ்வரர் ஆலய உண்டியலில் ஒரே நாளில் மட்டும் 44 லட்ச ரூபாய் கறுப்புப் பணம் போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தினமும் இரவு எட்டு மணி அளவில், பக்தர்கள் உண்டியலில் போடப்படும் பணம் எண்ணப்படும். அதன்படி, நேற்று உண்டியலை திறந்து எண்ணியபோது முப்பது 1000 ரூபாய் கட்டுகளும், இருபத்து எட்டு 500 ரூபாய் கட்டுகளும் போடப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close