Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கறுப்புப் பணம் வைத்திருப்போர் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து தப்பிவிடுவார்கள் என்றும், ரூபாய் பிரச்னை முடியும் வரை 4 தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை தள்ளிவைக்கக்கோரும் வழக்குகளோ இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ