Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழக அரசு எங்களை தற்கொலைச் சூழலுக்கு தள்ளுகிறது!’ - ரியல் எஸ்டேட் புள்ளிகளின் கொந்தளிப்பு

             

முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பத்திரப்பதிவு அதிகாரிகள் தனி லாபி நடத்திக்கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் வணிகர்களைத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறார்கள் என்று ரியல் எஸ்டேட் வணிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.

கடந்த 2 மாதமாக தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நிலவணிகம் நடக்கவில்லை என்றும்,இதனால் தமிழக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்  வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள் ரியல் எஸ்டேட் வணிகம் செய்வோர்.கோடிகளில் புரளும் அவர்களுக்கு 3 மாதமாக வியாபாரம் இல்லை என்பதை  ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். சிதம்பரம் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வந்த ஒருவர், தற்போதைய நிலையைத் தாங்கவியலாமல் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் என்று செய்திகள் பரவியுள்ளது மாநிலம் முழுவதுமுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணை பணமாக்கும் வித்தையைக் கற்ற ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை என்று,இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நல சங்கத்தின் நிறுவன தலைவர், விருகை N கண்ணனிடம் கேட்டோம். 'நாங்க என்ன சார் தவறு செய்தோம்' என்று அதிரடி கேள்வியோடு தொடங்கிய கண்ணன் கொந்தளிப்போடு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,"ரியல் எஸ்டேட் தொழில் இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான இழப்புக்குக் காரணம் அதிகாரிகள்தான்.முழுக்க அவர்களின் மெத்தன போக்குதான்  இப்போது நாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.நாங்கள் மட்டுமல்ல கட்டுமானத் தொழிலாளர்கள்,கட்டுமானப் பொருட்களை  உற்பத்திசெய்வோர் என்று பலதரப்பட்ட தரப்பினரும் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள்.இவர்கள் மட்டுமல்ல,கொத்தனார்,சித்தாளு,மார்பில் ஓட்டுவோர்,கார்பெண்டர்,டைல்ஸ் போடுவோர், குருக்கள்,பெயிண்டர் இந்த மாதிரி 25 பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் வாங்கினால்தான் வீடுகட்ட முடியும்,இவ்வளவு தொழிலாளர்கள் வாழமுடியும்.ஆனால் இப்போது நலிந்த நிலையில்  இருக்கிறோம்.ரியல் எஸ்டேட் இல்லையென்றால் எப்படி நகரங்கள் உருவாகியிருக்க முடியும்.    

சென்னையைச் சுற்றி 150 கி.மீ. பரப்பளவுக்கு நகரம் விரிவாகியுள்ளது.8 கோடி பேர் வாழ்கிறார்கள்.இவர்கள் எங்கே போய் தங்குவார்கள்.அதனால்தான் ஆங்காங்கே இந்தப் பகுதியில் வீடுகள் கட்டப்படுகினறன. போரூர்,மாங்காடு,ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,காஞ்சிபுரம்,வேலூர் என்று மக்கள்  செல்கிறார்கள்.ஏன் என்றால், வாடகை வீட்டில் இருந்து சிரமப்படுவதைவிட எங்கேயாவது சொந்தவீட்டில் இருக்கலாம் என்று தான் செல்கிறார்கள்.

நாங்கள் விவசாயத்திற்கு எதிரிகள் இல்லை.நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். ஆனால் விவசாயி மூன்று வேளையும் சோறு மட்டுமே தின்று கொண்டு இருந்தால் போதுமா.இருக்க இடம்,உடுக்க உடை வேணாமா.எல்லாமே அவசியம் இந்த நாட்டில்.விவசாயம் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் விவசாயத் தொழிலார்கள் பற்றி யோசித்தது உண்டா.மெஷின் வந்துவிட்டது விவசாயம் செய்ய.அதனால்தான் விவசாயத் தொழிலாளர்கள் தரகர் தொழிலுக்கு வந்துவிட்டார்கள்.சிலர் கட்டுமானதொழிலாளர்களாகவும் மாறிவிட்டனர்.

எங்கள் தொழில் குறித்து உயர்நீதிமன்றமே முடிவெடுக்கிறது என்றால், எதற்கு தமிழக அரசு, தமிழக முதல்வர், அமைச்சர்கள்  எம்.எல்.ஏ.க்கள்.மக்கள் பிரச்னையை மக்கள்தான்,மக்கள் பிரதிநிதிகள்தான் தீர்க்கமுடியும். தொழிலாளியின் கஷ்டத்தை நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லை.அன் ஆத்ரைஸ் என்று கூறுகிறார்கள். எப்படி அன் ஆத்ரைஸ் வரும்,கட்டிய பில்டிங்கில்தான் அன்-ஆத்ரைஸ் வரும்.காலி இடத்தில் வராது.இதையெல்லாம் ஒழுங்குமுறை செய்யவேண்டும்.சி.எம்.டி. அப்ரூவல், டி.டி.சி.பி. அப்ரூவல், உள்ளிட்டவற்றுக்கு நாங்க எதிரிகள் இல்லை. மூன்றாவதாக ஒரு அப்ரூவல் கொண்டுவரவேண்டும்.95% உள்ள பட்டா நிலங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.   

             

இது தொடர்பாக பத்திரப்பதிவு அமைச்சரிடம் முறையிட்டு இருக்கிறோம்.'சாரி...இதைப்பற்றி என்னிடம் கேட்கவேண்டாம்.செகரட்டரி கிட்ட கேளுங்க' என்று கூறிவிட்டார். இப்படி சூழல் இருப்பதால்தான் நாங்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.வெறும் ரியல் எஸ்டேட் பிரச்னை மட்டுமல்ல.நாட்டின் பிரச்னை. முதல்வர்  மருத்துவமனையில் இருக்கிறார்.அதனால் பிரச்னையை அப்படியே விட்டுவிடுவதா.அதற்கு மாற்று நடவடிக்கையாக, நிதியமைச்சர் எங்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்.நாட்டுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்  என்று அவர்தான் தீர்மானம் செய்யவேண்டும். எல்லாமே அம்மா தான் முடிவெடுக்க வேண்டும் என்றால், நாங்கள் அதுக்காக வெயிட் பண்ண வேண்டுமா.உலகப் போர் வந்துவிட்டால் இப்படித்தான் அரசு வெயிட் பண்ணுமா.

சமீபத்தில் நிதியமைச்சர் ஒபிஎஸ்,பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.செல்வராஜ்,அரசுத் தரப்பு வழக்கறிஞர் அய்யாதுரை ஆகியோரைப் பார்த்து விளக்கமாக முறையிட்டு வந்திருக்கிறோம்.தற்போது முடிந்துவிட்ட உள்ளாட்சி மன்ற அதிகாரத்தை மீண்டும் முன்பு இருந்த பிரதிநிதிகள் கையிலேயே ஆளுநர் அளித்துள்ளார் என்றால், உள்ளாட்சித்தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது,அதனால் உள்ளாட்சி மன்றங்கள் செயல்படவேண்டும் என்றுதானே. ஒரே நாளில் இது நடக்கிறது. இதே தீவிரத்தை ஏன் ரியல் எஸ்டேட் பிரச்னையில் தமிழக அரசு காட்டவில்லை. எங்கள் விஷயத்தில் ஏன் மெத்தன போக்கு தொடருகிறது.

ரியல் எஸ்டேட் பிரச்னைக்கு எந்த அரசியல் தலைவர்களும் குரல்கொடுக்கவில்லை.ஏன் என்றால் எங்களிடம் வாக்குவங்கி இல்லை என்று கருதுகிறார்கள். நாங்கள் இந்தக் கட்சிக்குத்தான் சப்போர்ட் பண்ணனும் என்று நிலைப்பாடு எடுத்தால் என்ன ஆகும் கட்சிகளின் நிலை."என்று பொரிந்து தள்ளினார் கண்ணன்.

மௌனம் கலைக்குமா தமிழக அரசு?

சி.தேவராஜன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close