Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி மார்க்சிஸ்ட் டிச.20ல் மறியல்

 

வறட்சி நிவாரணம் வழங்கிடக் கோரியும், தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழகம் முழுவதும்  டிசம்பர் 20-ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளைத் துவக்கிடவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோத தாக்குதல்களை எதிர்த்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரியும், மத்திய அரசு காவிரி மேம்பாட்டு வாரியத்தை அமைக்க கோரியும் டிசம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு எழுச்சிமிகு மறியல் போராட்டத்தை நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ