Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கிக்கு எதிரான வழக்கில் நவ.16ல் முக்கிய உத்தரவு!

ரிசர்வ் வங்கிக்கு எதிரான வழக்கில் நவம்பர் 16-ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சென்று பணம் மாற்றச் சென்ற வங்கி வாடிக்கையாளர் ராமமூர்த்தியை, புதிய பணம் இன்னும் வரவில்லை என்று கூறி, வங்கி அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர். 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கிக்கு எதிராக மத்திய வங்கி வாடிக்கையாளர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மக்கள் மட்டும் அல்ல வங்கி ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு இந்த வழக்கில் வரும் 16-ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் நீதிபதி கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ