Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடைக்கானலில் கேரள வாலிபர்களின் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்!

கொடைக்கானலில் விடுதி அறைக்குள் காற்றோட்டம் இல்லாமல் இருந்ததே கார்பன் மோனாக்ஸைடு உருவானதாகவும், இதனால்தான் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் தாமஸ், விபின் உட்பட 11 பேரும் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி வந்ததும் பல்வேறு இடங்களுக்கு பிரிந்தனர். இவர்களில் ஒருவர் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல இருந்தார். இந்நிலையில், நண்பர்கள் அனைவரும்  சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். கடந்த 11 ஆம் தேதி ஆலப்புழாவில் இருந்து  ஒரு டெம்போவை விபின் (26) ஓட்டி வர கொடைக்கானல் கிளம்பினர்.

12 ஆம் தேதி கொடைக்கானல் வந்தவர்கள் டால்பின் நோஸ் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விடுதியில் 2 அறைகள் எடுத்தனர். அறைகள் சுத்தம் செய்ய சொல்லி விட்டு வெளியே சென்றவர்கள் இரவு 9 மணிக்கு மேல் திரும்பினர். உணவுக்காக கோழிக்ககறி கிரில் முறையில் செய்ய கையோடு கொண்டு வந்த அடுப்பும் மரக்கரியும் பற்ற வைத்து மேலே கம்பிவலை வைத்து கோழிக்கறி சமைத்து கொண்டிருந்தனர். அந்த இரவு நேரத்தில் ரோந்து வந்த கொடைக்கானல் போலீசார் இவர்களை விசாரித்து  விருந்தில் பங்கெடுத்து விட்டு பணியைத் தொடர்ந்துள்ளனர்.

இரவு உணவுக்கு பின் அறைக்கு திரும்பிய நண்பர்கள் ஒரு அறையில் நிறைய குளிர்ந்ததால் வெளியில் வைத்து சமைத்த கரி அடுப்பை உள்ளே வைத்து விட்டு மீதமிருந்த மரக்கரியை அடுப்பிலே போட்டுவிட்டு படுத்து விட்டனர். காலை 8.30 மணி ஆகியும் பக்கத்து அறைக்கதவு திறக்காததை கண்டு கதவை உடைத்து பார்த்ததில் நண்பர்கள் வாயில் நுரை தள்ள உயிருக்கு போராடியது தெரிந்தது. உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தோளில் சுமந்து மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர். அருகில் இருந்த செக்போஸ்டில் சொல்லி ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சை அளித்ததில் ஏற்கனவே ஒருவர் இறந்த நிலையிலும் மற்றொருவர் சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்ததும் தெரிந்தது. தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் உடற்கூராய்வில் கார்பன் மோனேக்ஸைடு வாயு தாக்கியதால் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "அறைக்குள் காற்றோட்டம் இல்லாமல் இருந்ததே கார்பன் மோனாக்ஸைடு உருவாக காரணம். இந்த வகை வாயுவிற்கு மணம் இல்லை. கடுமையான நச்சு வாயு" என்று தெரிவித்தனர்.

செய்தி, படங்கள்: வீ.சக்திஅருணகிரி

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close