Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

அரவக்குறிச்சி, தஞ்சைத் தொகுதி தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரவக்குறிச்சி பாமக வேட்பாளர் பாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அத்துடன், தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் நீதிபதி விளக்கம் அளித்தார்.

இதனிடையே கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், குறிப்பிட்ட தொகுதிகளில் எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு; வழக்கு விசாரணை 2017 மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close