Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'செல்லாத ரூபாய்', முடமான கூட்டுறவு சங்கங்கள், அல்லல்படும் விவசாயிகள்!

                

நாடு முழுவதும் ரூ.500,ரூ.1000 தாள்களை மாற்ற வங்கிகளிலும் ஏ.டி.எம். வாசலிலும் மணிக்கணக்கில் காத்திருப்பதுதான் பொதுமக்களின் இப்போதைய அன்றாட கடமையாக இருக்கிறது. இந்த நிலையில் நகர மக்களின் துன்பங்களைத்தாண்டி இருக்கிறது கிராம மக்களின், ஏழை விவசாயிகளின் கண்ணீர்.

விவசாயிகளின் அன்றாட வாழ்வின் இணைப்புப் பாலமாக இருப்பது கிராம அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள். அந்த வங்கிகள் தான் ஏழை மக்களின் உள்ளூர் தேசிய வாங்கி. இப்போது 500,1000 ரூபாய்களை மாற்ற அங்கே சென்று ஏமாற்றத்துடன் விவசாயிகள் திரும்பி வருகின்றனர். நகரங்களில் உள்ள வங்கிகளில் மட்டும் கவனம் செலுத்தும் மத்திய அரசு, கிராமப்புற ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மீதும் கடைக் கண்வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில்," தமிழகம் முழுவதும் 4,530 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.இவற்றில் கடந்த 9ம் தேதி முதல் எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு கரன்சி தரும் ஆர்பிஐ இந்த சங்கங்களுக்கு பணம் தரவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் நியாய விலைக்கடைகளில் இலவச அரிசி மற்றும் பெற்றுக்கொள்ளுங்கள், மற்ற பொருட்கள் இப்போதைக்கு இல்லை என்று ஊழியர்கள் மக்களைத் திருப்பியனுப்புகின்றனர்.அதே போல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. உர விற்பனையும் நடக்கவில்லை.நகைக்கடன் வழங்கவில்லை, டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்பவும் பணம் வழங்கவும் இயலவில்லை.தானிய ஈட்டுக்கடன் திரும்ப பெற இயவில்லை. இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் முடங்கியுள்ளன.

மேலும், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்,பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள்,கூட்டுறவு மருந்தகங்கள்,சேவை மையங்கள்,என அனைத்தும் முடங்கியுள்ளன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள லட்சக்கணக்கான உள்ள அன்றாட கூலிவாங்கும் மக்களுக்கு  பணம் வழங்க முடியவில்லை. இதனால் கிராம மக்களின் பொருளாதாரம் முடங்கியுள்ளது.  இதனால் உடனடியாக  மத்திய,மாநில அரசுகள் புதிய ரூபாய் தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.    

- சி.தேவராஜன்              

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ