Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் விபத்துகள்... பலியாகும் பிஞ்சுகள்... கொதித்தெழுந்த மக்கள்

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி பகுதியில் மின்னல் வேகத்தில் செல்லும் தனியார் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதில் பல உயிர்கள் பலியாகி வரும் நிலையில் இன்று மாணவி ஒருவர் தனியார் வாகனம் மோதி உயிரிழந்ததால் கொந்தளித்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோடாங்கிபட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி நித்யா. அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவி இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று மாணவி மீது மோதியது. இதில் மாணவி நித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோடாங்கிபட்டி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வரும் தனியார் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் 3 மணி நேரமாக மறியல் போராட்டம் நடைபெறுகிறது. தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதில் எங்கும் நிறுத்தாமல் 19 கிமீ தூரத்தை வெறும் 17 நிமிடங்களில் தனியார் பேருந்துகள் கடந்து செல்கிறது. பேருந்துகளை இந்த வேகத்தில் இயக்க அனுமதி வழங்க வட்டார போக்குவரத்து அலுவலரை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர்.

செய்தி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

 

எடிட்டர் சாய்ஸ்