Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயங்களை அள்ளிக்கொடுக்கும் சென்னை ரிசர்வ் வங்கி

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றச் செல்லும் பொதுமக்களுக்கு சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி, 10, 5 ரூபாய் நாணயங்களை தாராளமாக கொடுத்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். மேலும், இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். சில தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணத்தை மாற்றிக் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அவர்களுக்குப் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டது. இதனால், ஏராளமானவர்கள் ரிசர்வ் வங்கிக்கு இன்று காலை வந்தனர். அவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டு மற்றும் 10, 5 ரூபாய் நாணயங்கள் வழங்கியது ரிசர்வ் வங்கி. சில்லறை தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக வந்த புகாரைத் தொடர்ந்து தற்போது நாணயங்களை ரிசர்வ் வங்கி வாரி வழங்கி வருகிறது.

படங்கள்: தே.அசோக்குமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close