Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கியில் வரிசையில் நிற்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்!

 

மதுரை அருகே வங்கியில் பணம் மாற்ற வரிசையில் நிற்கும் பொதுமக்களிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதுரையை அடுத்த நல்லூரில் உள்ள வங்கிக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழைய 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது, மு.க.ஸ்டாலினை கண்ட பொதுமக்கள், "மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால், கடந்த ஒரு வார காலமாக அனைத்து பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது அன்றா வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" குற்றம் சாட்டினார்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், வங்கி உள்ளே சென்று வங்கி மேலாளரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, "பொதுமக்களை நீண்ட நேரமாக வரிசையில் காக்க வைக்க வேண்டாம் என்றும், முடிந்த அளவுக்கு அனைவருக்கும் விரைவில் பணம் கிடைக்க வேறு ஏதேனும் மாற்று வழியிருந்தால், அதனை உடனடியாக செய்யும்படியும், அனைவருக்கும் பணம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ