Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டுக்கு பணம் வாங்கிய 48 பேருக்கு சம்மன்!

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்கிய 48 பேருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் சம்மன் அனுப்பியுள்ளார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் பெற்றது தொடர்பாக, 48 பேருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இன்று சம்மன் அனுப்பி உள்ளார்.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இதுவரை 4.8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வாகன சோதனையின்போது, ரூ.1.27 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close