Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷன்ட் டெட்..! மு.க.ஸ்டாலின் கிண்டல் 

ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷன்ட் டெட் என்பது போலவே மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். மேலும், இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். சில தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணத்தை மாற்றிக் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷன்ட் டெட் என்பது போலவே மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது என்று  கிண்டல் அடித்தார்.

மேலும், ஓட்டு போட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close