Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அண்ணா பல்கலைகழகம் தரைத்தட்டிய கப்பலாகி விட்டது" - பேராசிரியர்கள் குமுறல்

அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாக முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். 

இந்த போராட்டத்தில், 2010-ம் ஆண்டில் இருந்து  தங்களுக்கு வழங்க வேண்டிய  பதவி உயர்வு வழங்க வேண்டும்.  துணைவேந்தர் பதவி திறமை வாய்ந்த ஊழல் கறைப்படியாத நபரை உடனே நியமிக்க வேண்டும். குறைதீர்ப்பு மையத்தை ஆரம்பித்து முறைகேடாக நடந்த பணி நியமனத்தை ரத்து செய்து அனைத்து நிலைகளிலும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை நடத்திட வேண்டும்.  துறைத்தலைவர் மற்றும் இயக்குநர் நியமனத்தின்போது பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். அனைத்து பேராசிரியர்களும் சம உரிமை கிடைக்கும் வகையில் சுழல் அடிப்படையில் துறைத்தலைவர் மற்றும் இயக்குநர் பதவிக்கு நியமிக்க வேண்டும். வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும். 

அனைவருக்கும் ஒரே மாதிரியான  விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் பேராசிரியர்கள் உரிய இடமளிக்க வேண்டும். துறைத்தலைவர்களும், இயக்குநர்களும் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கு நல்ல சூழ்நிலையும், மேம்படுத்தலுக்கான வாய்ப்பினையும் வழங்க வேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டத்தில்  இறங்கி இருக்கிறார்கள்.

உள்ளிருப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் அசோசியேசனின் பொருளாளரும் பேராசிரியருமான  சக்திவேல் "அண்ணா பல்கலைக்கழகத்தில் பல காலமாக பதவி உயர்வு வழங்காமல் உதவி பேராசிரியாகவும், இணை பேராசிரியராகவும் வைத்திருக்கிறது. அடுத்தடுத்த வந்த துணைவேந்தர்கள் பணம் வாங்கிக்கொண்டு புதியவர்களை நியமித்தார்களே தவிர, ஏற்கனவே உள்ளவர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இவர்கள் பல்கலைக்கழகத்தை சூறையாடி சென்று இருக்கிறார்கள். இனி வரும் காலத்தில் நல்ல கல்வியாளரும், கறைப்படியாதவரையும் துணைவேந்தராக நியமிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் இப்போது தரைத்தட்டி நிற்கும் கப்பலாக இருக்கிறது. இன்னும் பத்து வருடத்தில் முன்னேறி வர வேண்டும் என்றால் நல்ல கல்வியாளரை துணைவேந்தராக நியமித்தால் மட்டுமே மற்ற கல்வி நிறுவனத்துடன் போட்டி போட்டு முன்னேற முடியும். இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் குறை தீர்க்கும் வகையில் ஒரு அமைப்பினை உருவாக்கிட வேண்டும். இந்த அமைப்பு தவறான முறையில் பணி ஆணை பெற்றவர்களை பதவியில் இருந்து விலக்கும் அதிகாரம் வேண்டும். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை  துறைத்தலைவர் பதவியினை சுழல் முறையில் மாற்றி அமைப்பார்கள். ஆனால் இப்போது அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே துறைத்தலைவர் பதவியும், இயக்குநர் பதவியும் பெற்று இருக்கிறார்கள். இதனால்  மூத்த பேராசிரியர்கள் எல்லாம் மனம் வெம்பி இருக்கிறார்கள். 

நிர்வாக அளவில் வெளிப்படத்தன்மையுடன் இருக்க வேண்டும். இங்குள்ள பேராசிரியர்களுக்கு ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடக்கிறதா என்பதே தெரியாமலேயே நடத்துகிறார்கள். ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே இருக்கிறது. ஓய்வு பெற்றவர்கள் வெளியே செல்லாமல் இங்கே பணியாற்றுகிறார்கள். இவர்கள் ஓய்வு ஊதியம் வாங்குவதோடு, 80,000 - 90,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்களால் இளம் தலைமுறையினர் முன்னேறாமல் தடுக்கப்படுப்படுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் 40% நபர் ஆசிரியர் உதவியாளர்களை நியமித்து நடத்தி வருகிறது. இவர்களை தற்காலிகமாக நியமித்தாலும் இவர்களிடமும் பணம் பெற்றுக்கொண்டு நியமிக்கிறார்கள். இந்த நிலையினை மாற்றி உடனே நல்ல நிலையினை ஏற்படுத்திட வேண்டும்" என்கிறார்.

பேராசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றுமா அரசு அல்லது போராட்டம் வேகம் பிடிக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

- ஞா. சக்திவேல் முருகன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close