Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டுக்கு லெஃப்ட்... நோட்டுக்கு ரைட்... இடைத்தேர்தல் தொகுதிகளில் இரு கை விரல்களிலும் மை'

மதுரை : ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில், வாக்களிக்க இடது கை விரலிலும், பணத்தை மாற்ற வலது கை விரலிலும் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில், அனைவருக்கும் பணம் கிடைக்கப்பெறும் வகையிலும், வெவ்வேறு வங்கிகளில் ஒரு சிலரே தொடர்ச்சியாக வந்து ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்வதை தடுக்கும் வகையிலும், பணத்தை மாற்றிச்செல்லும் பொதுமக்களின் கை விரல்களில் அழியா மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகம், புதுவை உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுவதால், கை விரல்களில் மை வைக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வாக்களித்தவர்களுக்கு அதன் அடையாளமாக இடது கை ஆள்காட்டி விரலிலும், நோட்டுகளை மாற்ற வலது கை ஆட்காட்டி விரலிலும் மை வைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம், புதுவை நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு இரு கை விரல்களிலும் மை வைக்கப்பட உள்ளது.

- ச.ஜெ.ரவி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close