Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை காரணமாக ஊட்டியில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று முன் தினம் குன்னூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததை அடுத்து, ஊட்டி மலை ரயில் பாதையில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்த மண் சரிவால் ரயில் தண்டவாளத்தில் மரம், செடிகள், கற்கள் என வேரோடு சாய்ந்து கிடந்தன. இதனால் ரயிலானது கல்லாறு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். இதனை அடுத்து ரயில்வே தொழிலாளர்கள் அந்த இடத்துக்குச் சென்று செடிகள், மரங்கள் அனைத்தையும் அகற்றினர். பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகே ரயில் இயக்கப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close