Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘வாக்கிங்... சாட்டிங்... செல்ஃபி...!’ ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ சீஸன்-2


தஞ்சாவூர் : "பொதுமக்களோடு வாங்கிங், பேருந்து நிலைய கடையில் காபி, பொதுமக்களோடு உரையாடல், செல்ஃபி என நமக்கு நாமே ஸ்டைலில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் தி.மு.க. கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு தொகுதியிலும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கமான வேனில் சென்று முக்கிய பாயின்ட்களில் பேசுவது என இல்லாமல், ரோட்டோர கடையில் டீ சாப்பிடுவது, ரோட்டில் செல்லும் மக்களிடம் பேசுவது என நமக்கு நாமே ஸ்டைலில் பொதுமக்கள் சந்திப்பையும் நிகழ்த்தி வருகிறார்.

அதன்படி தஞ்சாவூரில் வாக்கிங், பொதுமக்களுடன் செல்ஃபி, பஸ் ஸ்டாண்ட் கடையில் காபி பொதுமக்களை சந்தித்து என வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.
தஞ்சாவூர் அண்ணா ஸ்டேடியத்தில் காலை 6 மணிக்கு வாக்கிங் செல்வதற்காக வந்தார் ஸ்டாலின். வாக்கிங் வந்தவர்களுடன் பேசியபடி, கைகளை குலுக்கியபடியே வாக்கிங் சென்றவர், அடுத்து பழைய  பேருந்து நிலையம் அருகே உள்ள பழமைவாய்ந்த உணவு விடுதி ஒன்றில் தனது சகாக்களுடன் காபி குடித்தார். "கலைஞர் இந்த தொகுதியில் நிற்கும்போது இங்கு வந்து தான் காபி குடிப்பார். நீங்களும் இங்கு வந்தது மகிழ்ச்சி" என்றார் அதன் உரிமையாளர். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்டாலின் வந்த தகவலை அறிந்து கூட்டம் கூட... அவர்களுடன் கைகளை குலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். இறுதியில் உதயசூரியனுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென கேட்டுகொண்டு விடைபெற்றார்.

நம்ம ஆட்சியில கொண்டு வந்த உழவர் சந்தை எங்கே இருக்கிறது என கேட்டு, உழவர் சந்தைக்கு சென்றவர், பொதுமக்களிடம் பேசியவர், அங்கிருந்து வேளாண் அதிகாரிகளிடமும் பேசினார். உழவர் சந்தை ஏன் டல்லா இருக்கு என ஸ்டாலின் கேட்க... அதெல்லாம் நல்லா தான் போயிட்டிருக்கு சார். இன்னும் கொஞ்சம் டெவலப் செய்யணும்' என சொன்னவரிடம், அதுக்கென்ன நிச்சயமா செய்யலாம்' என சொல்லி விட்டு புறப்பட்டார்.

தொடர்ந்து காமராஜ் மார்க்கெட்டிலும் காரை நிறுத்தி இறங்கி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அங்குள்ள சில கடைகளுக்கு சென்றவர், கடையின் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உரிமையாளர்கள் சீட்டில் அமர்ந்து போஸ் கொடுத்தார். தஞ்சை தி.மு.க.வின் கோட்டை. அதை இந்த தேர்தலில் உறுதிப்படுத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் மறக்காமல் சொல்லி வாக்கு சேகரித்தார்.

ஸ்டாலினின் இந்த நமக்கு நாமே ஸ்டைல் பிரசாரம், தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

- ஏ. ராம்

படங்கள் : கே. குணசீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close