Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு பாடமாக அமைய வேண்டும்: கருணாநிதி

இடைத்தேர்தல்கள் மூலம், செயல் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சிக்கு நல்லதொரு பாடத்தைத் தந்து நல்வழிப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைத்தேர்தலில் மோதும் இரு வரிசைகளில் ஜனநாயக மாமணிகள் கோக்கப்பட்டு உண்மையிலேயே கொள்கை உறுதியுடனும், இலட்சிய தாகத்துடனும் வெற்றிக் கேடயம் ஏந்தி வரும் கொள்கை வீரர் யார், அவர் உலவும் கொள்கைப் பாசறை எது, என்பதையெல்லாம் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து, அவர்தம் கரங்களில் வெற்றிக் கனியைத் தரும்போது, அதைப் பெற்றுக் கொள்ள; தாள் பணிந்து கழக அணியினர் தயாராக இருக்கும்போது, உரியவருக்கு உரியதைப் பெற்றுக் கொள்ள உரிமையுண்டு என்பதை அறிந்து, அதற்காகப் பாடுபடுவது தான் அறநெறியாகும் என்பதை உணர்ந்து, இந்த இடைத்தேர்தல்கள் மூலம், செயல் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சிக்கு நல்லதொரு பாடத்தைத் தந்து நல்வழிப்படுத்தப் பாடுபட வேண்டும்; 

தமிழகத்தில் மூன்று இடங்களிலும் கழக வேட்பாளர்கள் தஞ்சை - டாக்டர் அஞ்சுகம், அரவக்குறிச்சி - கே.சி. பழனிசாமி, திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன் ஆகியோருக்கும், புதுவை நெல்லித் தோப்பில் தோழமைக் கட்சி வேட்பாளர் நாராயணசாமி அவர்களுக்கும் வெற்றி தேடித் தர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close