Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணம் மாற்ற வரிசையில் நின்றவர்களின் தாகத்தை தீர்த்த சமூக சேவகர்

கொளுத்தும் வெயிலில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்னை ரிசர்வ் வங்கி முன்பு வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு சமூக சேவகர் ஒருவர் தண்ணீர் பாக்கெட் வழங்கி அவர்களின் தாகத்தை தீர்த்தார்.

சென்னை பாரிமுனையில் ரிசர்வ் வங்கி முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக தினமும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். 

மதிய நேரத்தில் வெயில் கொளுத்துவதையும் பொருட்படுத்தாமல் வரிசையில் பல மணி நேரம் நிற்பவர்களுக்கு சென்னை, பாரிமுனை மஸ்கன் சாவடியைச் சேர்ந்த சமூக சேவகர் இலியாஸ் தண்ணீர் பாக்கெட் வழங்கி வருகிறார். 

'பொதுமக்கள் வெயில் என்றும் பாராமல் பல மணி நேரங்கள் நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டு வருகின்றனர். பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் தண்ணீர் பாக்கெட்டுகளை கொடுத்து வருகிறேன்' என்றார் இலியாஸ். 

படங்கள்: தே.அசோக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close