Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, ஊராட்சி மன்றத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்து நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊராட்சித் தலைவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரருமான ரவிச்சந்திரன் மனு கொடுத்திருந்தார்.

வைகோவும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டங்கள் நடத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டுள்ளது. இதனால், நெல்லை ஆட்சியரின் உத்தரவு ரத்தாகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ