Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கி சூட்டில் மீனவர்கள் காயம்: இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். காயம் அடைந்த தினேஷ், அரவிந்தன் ஆகியோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அண்மையில் இந்தியா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, எல்லைத் தாண்டும் இந்திய மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

- ஜெ.முருகன் 
படம்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ