Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்தியூர் வனத்தில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று நோய் தாக்கி இறந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அண்மைக் காலமாக யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் முயலும் யானைகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனை தடுக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், அந்தியூர் வனப்பகுதியில் யானைகள் நோய்கள் தாக்கி உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் யானை ஒன்று நோய் தாக்கி உயிரிழந்தது. இதனிடையே, நேற்று பெண் யானை ஒன்று அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்குதலில் உயிரிழந்துள்ளது.

இன்று காலை வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, யானை இறந்து கிடந்ததைக் கண்டு கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் யானை அங்கே குழித்தோண்டி புதைக்கப்பட்டது. 

- மாணிக்கவாசகம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ