Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்ஃபி எடுத்தவர்களை விரட்டிய ஒற்றை யானை !

மேலும் படங்களுக்கு... க்ளிக் செய்க...

கோவை : எதை பார்த்தாலும் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வது என்பதை வாடிக்கையாக்கி விட்டார்கள் மக்கள். கோவையில் மலைகோயில் படிகட்டுகளில் நின்றிருந்த யானையை மக்கள் சிலர் செல்ஃபி எடுக்க. துரத்தி விரட்டியது யானை.

யானை - மனித மோதல்கள் கோவை பகுதியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மனிதர்களால் யானைகளும், யானைகளால் மனிதர்களும் பாதிப்புக்குள்ளாகி வருவது என்பது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில் யானைகள் உலவும் பகுதியில் யானைகளை தொந்தரவு செய்யாமல், அதே நேரத்தில் பாதுகாப்பாக இருக்க மனிதர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யானைகள் விஷயத்தில் மனிதர்கள் மிகுந்த அஜாக்கிரதையுடன் இருந்து வருவது என்பது தொடர்கிறது.

மேலும் படங்களுக்கு... க்ளிக் செய்க...

கோவை தடாகம் பகுதியில் உள்ளது அனுவாவி சுப்பிரமணியர் கோயில். இந்த கோயிலுக்கு 100க்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை போட்ட ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மாலை, அதிகாலையில் ஐயப்ப பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வருகிறார்கள்.

வனத்தையொட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் இங்கு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அதிகாலை, மாலை நேரங்களில் கோயிலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதை மீறி மாலை, அதிகாலை நேரங்களில் வரும் பக்தர்கள், சிலர் யானையை கண்ட பின்னரும் ஆபத்தை உணர்ந்து அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறாமல், யானைகளை விரட்டும் முயற்சியிலும், யானைகள் முன்னால் நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் படங்களுக்கு... க்ளிக் செய்க...

நேற்று மாலை அனுவாவி சுப்பிரமணியர் கோயில் படிகட்டுகளில் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. படிகட்டுகள் வழியாக யானை நடந்து வர... கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அதே நேரத்தில் படிகட்டுகளில் இருந்தவர்கள், யானையை துரத்தும் முயற்சியிலும், யானை முன்பு நின்று செல்ஃபி எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து யானை துரத்துவது போல மிரட்ட... அடித்து பிடித்து ஓடியிருக்கிறார்கள் மக்கள்.

இது மிகவும் ஆபத்தானது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். "யானைகள் மனிதர்களை தாக்க வேண்டும் என நினைத்து தாக்குவதில்லை. தனக்கு ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தினால் தான் தாக்குகின்றன. யானைகளை தாக்கவோ, விரட்டும் நோக்கில் சத்தமிட்டாலோ அது தன்னை பாதுகாக்கும் நோக்கில் உங்களை தாக்க கூடும். அதேபோல் யானைகள் முன்பு நின்று செல்ஃபி எடுப்பது என்பது மிக ஆபத்தானது. யானைகள் 40 கி.மீ வேகத்தில் மிக எளிதாக ஓடும்.

மேலும் படங்களுக்கு... க்ளிக் செய்க...

ஆனால் நம்மால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. அதேபோல் எந்த சத்தமும் இல்லாமல் யானைகளால் நடக்க முடியும். யானையின் கால்களின் அடிப்புறத்தில் வளரும் மென்னையான சதைப்பகுதி யானை நடக்கும் போது சத்தமின்றி நடக்கவும், அதன் உடலின் எடையை தாங்கி நடப்பதன் மூலம் ஏற்படும் அதிகபடியான அதிர்சியை குறைத்தும் அதனால் நடக்க முடியும். செல்ஃபி எடுக்கும்போதோ, அல்லது யானை இருப்பதை அறியாமல் செல்லும்போதோ எந்த சத்தமும் இல்லாமல் உங்கள் அருகில் யானை வந்து நிற்க கூடும். எனவே இது போன்ற நேரத்தில் கவனமாக செல்லவும்," என்றனர்.

செய்தி மற்றும் படங்கள் : தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ