Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்த விரலில் மை வைத்தால் வாக்களிக்க முடியாது'- 3 தொகுதி வாக்காளர்கள் உஷார்

சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள 3 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பழைய பணத்தை மாற்றும்போது தெரியாமல் இடது கையில் ஆள்காட்டி விரலில் மை வைத்தால் அவர்கள் வாக்களிக்க முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லாக்கானி கூறினார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்களில் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர். ஒரே நபர் பலமுறை ரூபாய் நோட்டுகளை மாற்றி வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணம் மாற்ற வருபவர்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பணம் மாற்ற வருபவர்களுக்கு வலது கையில் தற்போது மை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சில மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள தொகுதி வாக்காளர்கள் தங்களுடைய பணத்தை மாற்ற வங்கிக்கு போகும்போது தெரியாமல் இடது கை ஆட்காட்டி விரலில் மை வைத்தால் அவர்கள் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது நாடு முழுவதும் பழைய பணத்தை மாற்றும்போது வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. தவறுதலாக இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்தால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். மேலும், 3 தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு கிடையாது. 3 தொகுதியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அன்று விடுமுறை அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ