Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி அரசின் மெத்தனப்போக்கே மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது மோடி அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி சராமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர்கள் அரவிந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
இந்த கொடூரத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களில் சுமார் 800 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சமீபத்தில் டெல்லியில்  நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையின்போது இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசும்போது, 'தமிழக மீனவர்களைக் கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும்' என்றும் அறிவித்ததும் அதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தைகளின்போது இந்திய தரப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் வலுவாக தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கவில்லை என்று பேச்சு வார்த்தைகளில் பங்குக் கொண்ட தமிழக மற்றும் புதுவை மாநில மீனவர்களின் பிரதிநிதிகள் விமர்சித்துள்ளனர். மத்திய அரசின் மெத்தனப் போக்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கை நமது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும்.
 
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை அழைத்து துப்பாக்கி சூட்டுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதுடன் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு  வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close