Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒருமுறை மை வைத்துவிட்டால் அவ்வளவுதான்..! ரிசர்வ் வங்கியின் செக்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரு நபர்  ஒருதடவை மட்டுமே மாற்ற முடியும். அதற்காகத் தான் மை வைக்கப்படுகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் பயன்பாட்டைத் தடுக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் வங்கிகளில் கடந்த சில தினங்களாக காத்து கிடந்தனர். ஒரே நபர், பல அடையாள அட்டைகளை கொடுத்து அடுத்தடுத்த வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தெரியவந்தது. இதில் இன்னும் சிலர், ரூபாய் நோட்டுகளை மாற்ற 4000 ரூபாய்க்கு 400 ரூபாய் வரை கமிஷனாக பெற்றனர். இந்த தகவல்  ஆர்.பி.ஐக்கு தெரிய வந்ததும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சில கிடுக்குப்பிடி விதிமுறைகளை கொண்டு வந்தது.

அதாவது, பணத்தை மாற்ற வரும் நபர்களின் வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்தது. அதுதொடர்பாக அனைத்து வங்கிகளிலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மை வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. சென்னையில் கடந்த 16ம் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களுக்கு மை வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் அனைத்து வங்கிகளுக்கும் மை வரவில்லை. இதனால் மை இல்லாமல் பணம் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. 
 
 மை வைக்கப்பட்ட நபர் மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் எழுந்தது. ஆனால் அதற்கு வங்கி தரப்பில் எந்த பதிலும் இல்லை. ஆர்.பி.ஐயும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. இன்னும் சிலர் 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இவ்வாறு குழப்பமான சூழ்நிலையில் பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் தவித்தனர். 

இதுகுறித்து அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகராஜன் கூறுகையில், பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்ற வருபவர்களுக்கு வலது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. ஆனால் பல வங்கிகளுக்கு இன்னும் மை வரவில்லை. மைசூரில் உள்ள நிறுவனத்திடம் மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களால் அனைவருக்கும் மை சப்ளை செய்ய முடியாததால் இன்னும் சில இடங்களில் வங்கிகளே மை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. பணத்தை மாற்ற வருபவரின் விரலில் மை வைக்கப்பட்டு விட்டால் மீண்டும் அவரால் அடுத்த முறை செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. அவர்கள், தங்களது வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மக்கள், தங்கள் கையில் உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெறுவதுதான் காலசிறந்தது. இதன்மூலம் அனைத்து பணபரிவர்த்தனைகள் கணக்கில் வந்துவிடும். வங்கிகளின் தற்போதைய முக்கியமான பணிகளில் ஒன்றாக பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதனால் வங்கிகளின் அன்றாட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகைகளுக்கு கடன் கொடுப்பது, ரெக்கவரி, புதிய கணக்கு தொடக்கம், டி.டி. உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன. ஆனால் செக் பரிவர்த்தணை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது என்றார்.

எஸ். மகேஷ் 

படம்: பா.காளிமுத்து

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close