Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரானைட் முறைகேடு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கிரானைட் முறைகேடு பற்றி சிபிஐ விசாரிகக் கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசின் 15 துறைகளிடம் உயர் நீதிமன்றம் கருத்து கேட்டு வருகிறது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சகாயம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்து ஓராண்டாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். 

பின்னர், கிரானைட் அதிபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், 17 ஆண்டுகளில் தாெழில் மூலம் 15 சதவீதம் வரை மட்டுமே லாபம் வந்தது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறுவது போல் 90 சதவீத லாபத்தை நாங்கள் ஈட்டவில்லை. சகாயம் அறிக்கையில் மிகைப்படுத்தி லாபம் காட்டப்பட்டுள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வாதிகையில், மத்திய அரசின் 4 துறையிடம் தகவல் பெறப்பட்டு வருகிறது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க 6 வார அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

எடிட்டர் சாய்ஸ்